5246.

     ஆடக நீடொளியே நேடக நாடளியே
          ஆதி புராதனனே வேதி பராபரனே
     நாடக நாயகனே நானவ னானவனே
          ஞான சபாபதியே ஞான சபாபதியே.

உரை:

     பொன் மயமான பெருகிய ஒளி பொருந்தியவனே; மிகப் பழமையானவனே; வேத ஞானிகளின் மேலும் கீழும் ஆனவனே; பொன் உலக நாயகனே; நான் வேறு அவன் வேறு என்று எண்ணாதவனே; ஞான நாடகத்துக்குத் தலைவனே.

     (6)