5247. ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
நாரிய னேவரனே நாடிய னேபரனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை: அருமையானவனே; ஞான உருவானவனே; வேதியனே; ஒளியுடையவனே; ஆன்மாக்கள் ஒன்றும் இடமானவனே; எல்லார்க்கும் ஆதரவாக இருப்பவனே; குருவானவனே; உமாதேவியைப் பங்கிலே உடையவனே; மேலானவனே; எல்லாராலும் நாடப்படுபவனே; பரம்பொருளே. (7)
|