5248. ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம வனாதியனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை: எல்லாவற்றுக்கும் ஆதரவாக இருக்கின்ற வேத முதல்வனே; பொன்னின் ஒளியை உடையவனே; நாத தத்துவமாகிய செல்வத்தை உடையவனே; நாம் எல்லோரும் அவனாக இருப்பவனே. (8)
|