5249. தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
தீன சகாநிதியே சேகர மாநிதியே
நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை: தேவ கலைகளுக்கெல்லாம் செல்வமாக இருப்பவனே; ஜீவ கலைகளுக்கெல்லாம் செல்வமாக இருப்பவனே; ஏழைகளுக்கெல்லாம் உபாய நிதியாக இருப்பவனே; உச்சி மேற்கொள்ளப் படுகின்ற உயர்ந்தோர் செல்வமே; சொல்ல வல்லவர்களுக்கெல்லாம் தலைவனே; தேவியாகிய உமாதேவிக்குத் தலைவனே. (9)
|