5253. உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர நம்பர னே.
உரை: எனக்கு உருவும் உயிருமாக இருப்பவனே; உணர்வும் உறவுமாக இருப்பவனே; உறையும் பொருளுமாக ஒளிர்பவனே; ஒன்றாய் நன்றாய் என்றும் எனக்குத் தன்னைத் தந்த பரம்பரனே. (3)
|