120. ஜோதி ஜோதி

சிந்து

    அஃதாவது, அருட் சோதியைப் பாடுவது.

5255.

          ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
          ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
          ஜோதி ஜோதி ஜோதி அருட்
          ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

உரை:

     சுயஞ் சோதி - இயல்பாக உள்ள சோதி. பரஞ்சோதி - எல்லாச் சோதிக்கும் மேலான சோதி. அருட் சோதி - திருவருளைச் சோதியாக உள்ளவனே.

     (1)