5259. சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சயம வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
உரை: ஞான சபையும் பொற்சபையும் நான் ஆடுகின்ற சொந்த சபையாகி விட்டது; தேவர்களும் மூவர்களும் என்னுடைய பேச்சையே பேசுகின்றார்கள்; இல்வாழ்வில் இருந்து செய்யும் விரதத்தில் எனக்கு இனி இகழ்வு இல்லை; என்னுடைய பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது. (2)
|