5260.

     ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
          ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
     எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
          என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

உரை:

     சிவபெருமானுடைய அருட்சோதியால் உண்டாகும் அரசாட்சி எனக்கே உரியதாயிற்று; வேதங்களும் ஆகமங்களும் என்னையே புகழ்ந்து பேசுகின்றன; அறிஞர்கள் வாழும் உலக வாழ்வில் எனக்கு இனித் தாழ்வில்லை; என் பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது.

     (3)