5262. மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
உரை: மேரு மலையின் உச்சியின்கண் ஓங்கித் தோன்றுகின்றது உயரம்; அதன் மேல் உலகில் சிறப்பு மிகுந்த அரசாட்சி ஓங்குகிறது; அதில் பல காட்சிகள் காணப்படுகின்றன; அவைகள் சொல்ல முடியாதவை; அதற்குச் சிவனருளே சாட்சியாகும். (5)
|