5263. துரியமலை மேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
உரை: துரியத்தானமாகிய மலையின்மேல் ஒரு வளநாடு உளது. அதன்கண் சிவயோகியர் செய்யும் நடன வீடு ஒன்றுளது; அதனைக் கண்டவர்கள் காண்பார்களானால் செத்தவர்கள் எழுவார்கள் என்று கைத்தாளம் போடுவாயாக. (6)
|