5264.

     சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
          தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
     எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
          இறந்தார் எழுவார்என்று புறந்தாரை ஊது.

உரை:

     வாயால் சொல்லுதற்கரிய சோதி மலைமேல் தூயதாகிய துரியத்தானத்தில் அன்பு தரும் வேதங்களை ஓதுகின்ற எல்லாம் வல்ல சித்தர் நம்மை அடையும் போது இறந்தவர்கள் எழுவார்கள் என்று சங்கு கொண்டு ஊதுவாயாக.

     (7)