5265. சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
உரை: ஞான சபையும் பொற்சபையும் அறியத் தகுந்தவை என்பது விளங்கிற்று; சித்தர்களும் முத்தர்களும் யாவரும் என் பேச்சே பேசுகின்றார்கள்; இவ்வுலக வாழ்வில் எடுத்துரைக்கின்ற வாழ்க்கையில் எனக்கு இனிப் பேச்சு இல்லை; என்னைப் பற்றிய பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது. (8)
|