5266. வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
உரை: வல்லாங்கு சொன்னவர்களுக்குத் தாழ்வு வந்து வீழ்ந்தது; அவரை ஒத்த மற்றவர்களுக்கும் தாழ்வு வந்தது; நமது வலது தோள் ஆடும் நற்குறியாக அருள் வாழ்வு வந்து விட்டது; மற்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வாழ்வு வந்துவிட்டது. (9)
|