5267. அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
உரை: பொன்னம்பலத்தில் ஆடுகின்ற நம்முடைய பெருமானுடைய அருளாட்டம் அன்போடு துதித்தவர்க்குப் புகழ் உண்டாக்கிற்று. சொல்லாட்டம் - புகழ். அந்தத் திருவருள் ஆட்டத்தை அன்பொடு துதித்தவர்க்கு நல்ல புகழ் விளைந்தது; வம்பு பேசின கொடியவர்களுக்கு மல்லாட்டம் உண்டாயிற்று; வந்தபின் தலையசைவின்றிப் பலவேறு ஆட்டங்கள் உண்டாயின. (10)
|