5268.

     நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
          நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
     சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
          செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

உரை:

     நாத்திகம் பேசுகின்றவர்களுக்கு நாக்கில் முடை நாற்றமும் நாக்கு ருசியில் புண்ணின் நாற்றமும் சிறப்புடைய அம்பலவாணருடைய புகழ் பாடியவர்க்கு நல்ல செல்வாக்கும் நல்வாக்கும் தேவர்களின் திருவாக்கும் உண்டாயின.

     (11)