5272. அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.
உரை: அம்பலவாணன் என் அச்சத்தைப் போக்கினான் என்று ஊதுவாயாக; இச்சையும் இன்பத்தையும் அளித்தான் என்று ஊதுவாயாக. (4)
|