5273.

     என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
          இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
     பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
          பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

உரை:

     என் உயிரைக் காப்பாற்றினான் என்று ஊதுவாயாக; என் இன்பம் பலித்தது என்று ஊதுவாயாக; பொன்னுருவான மேனியைத் தந்தான் பொற் சபை அப்பன் என்று ஊதுவாயாக.

     (5)