5274. சிவமாக்கிக் கொண்டான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான்என்று ஊதூது சங்கே
நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
உரை: சிற்றம்பலத்துப் பெருமான் என்னைச் சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே; புதிய முறையில் பொருள்களை நோக்கும்படிச் செய்தான் என்று ஊதுவாயாக; நான் அவனானேன் என்று ஊதூது சங்கே. (6)
|