5275. நாத முடியான்என்று ஊதூது சங்கே
ஞான சபையான்என்று ஊதூது சங்கே
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.
உரை: நாத தத்துவத்தின் முடிவில் இருக்கின்றான் என்று ஊதுவாயாக; ஞான சபையில் இருக்கின்றான் என்று ஊதுவாயாக; எனக்குத் தன் திருவடியை அளித்தான் என்று ஊதுவாயாக; நான் செய்த பூசை பயன் தந்தது என்று ஊதுவாயாக. (7)
|