5277.

     என்னறி வானான்என்று ஊதூது சங்கே
          எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
     செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
          சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

உரை:

     என் அறிவுக்கு அறிவானான் என்று ஊதுவாயாக; எல்லாம் செய்ய வல்லவன் என்று ஊதுவாயாக; சிற்சபையில் வீற்றிருக்கின்ற என் அப்பன் செம்மை நிலையை எனக்குக் கொடுத்தருளினான் என்று ஊதூது சங்கே.

     (9)