5278.

     இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே
          எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
     திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
          சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.

உரை:

     சாகா நிலையை எனக்கு அருளினான் என்று ஊதுவாயாக; நினைத்த எண்ணம் பலித்தது என்று ஊதுவாயாக; சாகாத் திறத்தினை எனக்கு அளித்தான் என்று ஊதுவாயாக; இது அவன் தந்த வரமே என்று ஊதுவாயாக.

     (10)