5279. கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.
உரை: வஞ்சனை ஒழிந்தது என்று ஊதுவாயாக; அறியாமை இருள் ஒழிந்தது என்று ஊதுவாயாக; என் எண்ணமெல்லாம் பலித்தது என்று ஊதுவாயாக. (11)
|