5281. கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.
உரை: கருணையாகிய செல்வத்தை உடையவர் வந்தார் என்று ஊதுவாயாக; கடவுளாகிய அவனே கருணாநிதி என்று ஊதுவாயாக; திருவருள் நாடகத்தை ஆடுபவனே என்று ஊதுவாயாக; அம்பலத்தில் சோதியாக விளங்குபவன் என்று ஊதுவாயாக. (13)
|