5282. தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.
உரை: தனக்கு நிகர் ஒன்றும் இல்லாதவன் என்று ஊதுவாயாக; தனக்குத் தலைவன் தானே என்று ஊதுவாயாக; பொன்னிறமான நிறத்தை யுடையவன் என்று ஊதுவாயாக; அம்பலத்தில் நடம் செய்வான் என்று ஊதுவாயாக. (14)
|