5283.

     ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
          அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
     தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
          தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.

உரை:

     ஆனந்த உலகிற்கெல்லாம் நாதன் என்று ஊதுவாயாக; எல்லார்க்கும் அருள் செய்கின்ற அப்பன் என்று சங்கே ஊதுவாயாக; தான் ஒருகாலும் முடிவில்லாதவன் என்று சங்கே ஊதுவாயாக; தான் முடிவில்லாதவனாகில் அவன் தத்துவச் சோதிகட்கெல்லாம் தலைவன் என்று ஊதுவாயாக.

     (15)