123
123. சின்னம் பிடி
அஃதாவது, திருக்கோயில்கள் விழாக்களைத் தெரிவிக்கும்போது
ஊதப்படும் கருவிக்குச் சின்னம் என்று பெயர். இங்கே அம்பலவர் வந்தார் என்றும், அற்புதம் செய்கின்றார்
என்றும் சின்னம் பிடிக்கச் சொல்லுகின்றார்.
தாழிசை
5285. அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி
உரை: திருச்சின்னங்களே சிவபெருமான் வந்தார் என்று சின்னம் ஊதுவீர்களாக; செம்மையாகிய சிவபலத்தை நமக்களித்தார் என்று சின்னம் ஊதுவீர்களாக. (1)
|