5287.

     ஞானசித்தி புரம்என்று சின்னம் பிடி
          நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
     ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
          அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.

உரை:

     நாம் புகுமிடம் ஞான சித்தி புரம் என்று புகழ்வீர்களாக; ஞான சித்தி புரத்தை வடலூர் என்பதும் உண்டு. நம்மாலான தேவ சித்திகள் பலவும் செய்து வல்லவராவோம் என்றும் அருட் பெருஞ் சோதியைப் பெற்றோம் என்றும் சின்னம் பிடிப்பீர்களாக.

     (3)