5288.

     கொடிகட்டிக் கொண்டோம்என்று சின்னம் பிடி
          கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
     அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
          அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.

உரை:

     சிவக் கொடி பெற்றுக் கொண்டோம் என்றும் ஆனந்தக் கூத்தாடுகின்றோம் என்றும் சின்னம் பிடிப்பீர்களாக; சிவத்தினுடைய அடிமுடியைக் கண்டோம் என்றும் அதனுடைய அருளமுதத்தை உண்டோம் என்றும் சின்னம் பிடிப்பீர்களாக.

     (4)