5289. அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
சித்திபுரம் இடமென்று சின்னம் பிடி.
உரை: அற்புதம் செய்யும் பொருட்டு அப்பராகிய சிவபெருமான் வருகின்றார் என்று சின்னம் பிடிப்பீர்களாக; நீதி பலவும் நிலையாக நிலை பெற்றது என்றும் அது நிலைபெறும் இடம் வடலூர் உத்தரஞான சித்தி புரம் என்றும் சின்னம் பிடிப்பீர்களாக. (5)
|