5291. வேகாத கால்உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாத தலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
உரை: பிராண வாயுவும் பிராணவாயுவின் வேகத்தையும் கண்டறிந்து சின்னம் பிடிப்பீர்களாக; எக்காலத்தும் அழியப்படாததாகிய சிவத்தின் நடுநிலைத் தானத்தை அறிந்து அதன் வாயிலாகச் சாகாத கல்வியை உணர்ந்து திருச்சின்னம் பிடிப்பீர்களாக (7)
|