5292. மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
வேதாக மம்கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
உரை: எல்லாத் தத்துவங்கட்கும் உயர்நிலையான சிவதானத்தை அடைந்து மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; சிவம் தவிர பிறிதொன்றும் இல்லாமையால் சிவானந்தப் பெருவெளியில் நின்று சின்னம் பிடிப்பீர்களாக; வேதாகமங்களையும் வேதாந்தச் சித்தாந்த தத்துவங்களையும் கைவிட்டுச் சின்னம் பிடிப்பீர்களாக. (8)
|