5293. பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
உரை: பலவேறாகச் சொல்லப்படுகின்ற ஆகம வேதாந்த நெறிகளைக் கைவிட்டோம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; தத்துவம் பன்னிரண்டினையும் கைவிட்டுச் சன்மார்க்கமே மார்க்கம் என்று சின்னம் பிடிப்பீர்களாக; சத்திய நெறியையே விரும்புகின்றோம் என்று சின்னம் பிடிப்பீர்களாக (9)
|