New Page 3
நேரிசை வெண்பா
5369. இதுவே தருணம் எனை அணைதற் கிங்கே
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
அன்னியனே அல்லேன் அறிந்து.
உரை: அம்பலத்தில் நடனம் புரிகின்ற தூயவனே! சந்திரனைச் சடை முடியில் கொண்ட தலையை உடையவனே! சுத்த சிவனே! அடியவனாகிய நான் உனக்கு வேறானவன் அல்ல என்பதையறிந்து என்பால் இங்கு வந்தடைவதற்கு இது நல்ல தருணமாம். எ.று.
புனிதன் - தூய்மை உடையவன். விது - சந்திரன். சென்னியன் - தலையை உடையவன். இயல்பாகவே புனிதனாதலால் “சுத்த சிவன்” என்று துதிக்கின்றார். அன்னியன் - வேறானவன். (74)
|