நிலைமண்டில ஆசிரியப்பா

5388.

          சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
          திருநடம் புரியும் திருநட ராஜ
          எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
          மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.

உரை:

     ஞான சபையிலும் கனக சபையிலும் திருக்கூத்தாடி அருளும் நடராசப் பெருமானே! எனக்குத் திருவருள் ஞானம் தந்தருளிய உனக்கு யாதொரு கைம்மாறும் செய்ய அறிகிலேன். என்னை ஆண்டருள்; நின் திருவருள் வாழ்க. எ.று.

     பொற் சபை - கனக சபை. இறைவன் அருளிய திருவருள் ஞானத்திற்குக் கைம்மாறாக யாதொன்றும் தருதற்கு இல்லாமை பற்றி, “அடியேன் கைம்மாற்றை அறிந்திலன்” என்று அறிவிக்கின்றார்.

     (93)