5492. அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.
உரை: சிவந்த சடையை உடையவனும் அம்பலத்தில் ஆடுபவனும் சுயம்பு மூர்த்தியாய் உள்ளவனும் எல்லாம் உடையவனுமாகிய சிவபெருமான். என் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் அப்பா என்று நான் ஒருகால் சொன்ன அளவில் அப்பா மகனே என்று என்னுள் நிறைந்து விடுகின்றேன். எ.று.
துப்பர் சடை - பவளம்போல் சிவந்த சடை. தானே தானாதல் - சுயம்புவாதல். (6)
|