அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் | ஆனந்த பூர்த்தியாகி | அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே | அகிலாண்ட கோடியெல்லாந் | தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் | தழைத்ததெது மனவாக்கினில் | தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் | தந்தெய்வம் எந்தெய்வமென் | றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது | எங்கணும் பெருவழக்காய் | யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் | என்றைக்கு முள்ளதெதுமேல் | கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது | கருத்திற் கிசைந்தததுவே | கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் | கருதிஅஞ் சலிசெய்குவாம். |