பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


107


உளங்கொள்ளும் ஒப்பில் ஒருமொழி வருமாறு :

"போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
 தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
 சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
 ஏற்றுகின் றேன்எம் பிரான்ஓர் எழுத்தே. - 10. 864
.
(10)
 
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
    நிர்விடய கைவல்யமா
  நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
    நிர்த்தொந்த நித்தமுக்த
தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
    சதானந்த ஞானபகவ
  சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான்
    சர்வகா லமும்நிலைவனோ
அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக்
    கானந்த பூர்த்தியான
  அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார
    அநுபூதி யநுசூதமுங்
கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்
    கண்ணூ டிருந்தகுருவே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "நிர்க்குண . . . நினைவனோ" - (மாயாகாரியமாகிய முக்குணங்களுள்) ஒருகுணமும் இல்லாதவனே! பிணியில்லாதவனே! களங்கமில்லாதவனே! பற்றுக்கோடில்லாதவனே! புலன்களை வென்றவனே! வீடுபேற்றுவடிவினனே! அருவமானவனே! கூட்டமில்லாதவனே : அசைவற்றவனே! பேச்சற்றவனே! இரண்டாவ தில்லாதவனே, எப்போது முள்ளவனே, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனே, ஆவிகள்மாட்டு அளவிறந்த அன்புடையவனே! உலகத்தினைக் கடந்தவனே, அருட்பெருவெளியில் நிறைந்திருப்பவனே, எப்பொழுதும் இன்பமாக வுள்ளவனே, மூதறிவானவனே, (சிறப்புப்) பண்புகள் ஆறும் நிறைந்தவனே, இன்பவடிவினனே, நன்மை நிறைந்தவனே, இன்பத்தினைச் செய்தருள்கின்றவனே, எப்பொருட்கும் இறைவனே என்று மொழிந்து அடியேன் இடையறாது உன்னை எப்பொழுதும் உள்ளுவனோ?