(இவ் யானை யொப்பால் மெய்ப்பொருள் யானைபோன்று அளக்கலாகாப் பெரும்பொருள் என்பது விளங்கும். அந்தகர் என்பது அகக் கண்ணாகிய திருவடியுணர்வு நற்றவப்பேற்றால் கைவரப் பெறாது உண் பொருள் நாடிச் சமயம் மேற்கொண்ட சமயக் குருடர் என்பதாம். யானையைப் பழகிய யானையால் கைப்பற்றுவது போன்று மெய்ப் பொருளைத் திருவருளாற்றலாற் கைப்பற்றுவதாகும். இதுவே, "அவனருளாலே அவன்றாள் வணங்கி" (8. சிவபுராணம், 98) என்பதாகும். மேலும், திருவள்ளுவ நாயனார் திருக்குறிப்பும் வருமாறு காண்க:
| "வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள், |
| யானையால் யாளையாத் தற்று." |
| - திருக்குறள், 678. |
இத்திருப்பாடல் மூன்றும் இந்நூற்குப் பாயிரம்போன்று திகழ்கின்றன. திருக்குறள் பாயிரம் நான்கும் ஒருபுடையொப்பாக முப் பொருளுண்மையினைத் தப்பின்றிச் செப்புவதேயாம். அஃதாவது கடவுள் வாழ்த்துப் பகவனாகிய சிவபெருமானையும், வான்சிறப்பு ஆதியாகிய திருவருளையும், நீத்தார் பெருமை ஆருயிர்களையும். அறன்வலியுறுத்தல் அற்று அகலவேண்டிய மலம் மாயை கன்மங்களின் குறிப்புக்களையும் குறிக்கும் என்ப.
அதுபோல் இந்நூலின்கண் முதன் மூன்று திருப்பாட்டுகளும் ஒருபுடையொப்பாக முப்பொருளுண்மை செப்புவதேயாம். முதல்திருப்பாட்டில் "ஆனந்தபூர்த்தியாகி" என்பதனால் பதியம் "ஊரனந்தம் பெற்ற பேரனந்தம்" என்பதனால் பசுவும், "நிர்மல சகித, நிஷ்ப்ரபஞ்சப்பொருளை" என வரும் எதிர்மறைக் குறிப்பினால் பாசமும் குறிக்கப்பட்டுள்ளன எனலாம். முப்பொருளுண்மை செப்புவதே "வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது" (தொல். பொருள், 188) என்பதும் இப்பொருள் பயப்பது அதன் உட்கருத்தாகும். அந்நிலையில் அந் நூற்பா "யாண்டும் வேண்டிய கல்வி மூன்றிறவா" தென்பதாகும்.
(1)
வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன | மனோவாயு நிற்கும்வண்ணம் | வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு | மார்க்கத்தின் இச்சைபோல | நேசானு சாரியாய் விவகரிப் பேன்அந்த | நினைவையும் மறந்தபோது | நித்திரைகொள் வேன்தேகம் நீங்குமென எண்ணிலோ | நெஞ்சந் துடித்தயருவேன் |