திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே | சென்றோடி யாடிவருவீர் | செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே | திகழ்துருவம் அளவளாவி | உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில் | உழுந்தமிழும் ஆசமனமா | வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன் | உலகும்அயி ராவதமுமே | கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர் | ககனவட் டத்தையெல்லாம் | கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும் | காட்டுவீர் மேலும்மேலும் | மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன் | விளங்குவரு சித்திஇலிரோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |