பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


139


     (பொ - ள்) "ஆணிலே . . . . . . திருவருளை" - ஆண்பாலாருள்ளும் பெண்பாலாருள்ளும் அடியேனைப் போல முழுமூடனாயுள்ள ஓர் அறிவிலானைப் போல் ஒருவன் இவ்வுலகத்தின் பாலுண்டோ? (இடையறாது) அசையுங் காற்றாடியைப்போன்று (புலன்களில்) ஓடிச்சென்று பற்றி விட்டுநீங்க ஓண்ணாதபடி உழன்று கொண்டிருக்கும் (எளியேன்) நாட்டமாகிய சிந்தையை (உரனென்னும் தோட்டியான்) அடக்கி ஒரு கண்ணிமைப் பொழுதேனும் எளியேன் திருவருளைக் காணும் பேறு பெற்றிலேன்;

    "அல்லாது . . . பூணிலேன்" - அன்றியும் பேசாதிருக்கும் பெற்றியனாய் (அகநோக்கங்கொண்டு) புறநோக்கமற்றுக் கண்மூடிப், புறத்து அளவின்றி ஓவாது ஓடிக் கொண்டேயிருக்கும் உயிர்ப்பினை உள்ளடக்கி நிறுத்தி ஒளிவளர் கலைகள் பொருந்திய திங்களினைச் சென்று சேர்ந்து முட்டும்படி மூலத்திடத்துள்ள வெப்பமிக்க தீயினை எழுப்புதற்கு வேண்டிய சிறு நினைவுங்கூடக் கொண்டிலேன்;

    "இற்றைநாட் . . . வேண்டும்" - இன்றுவரையும் (எளியேன் இரவு பகலாய் இனிதுற முயன்று) கற்றதும் (கற்றல் கேட்டலுடையராய பெரியார்வாய் முனியாது) கேட்ட கேள்வியும் (பயன்பெறுதற்கின்றி வீணாகப்) போகவிட்டு, நிலையில்லாத உலகவாழ்க்கையி லுழல்வே னாயினேன், (தான் கக்கியதையும் அருவருப்பின்றி மீட்டும் நக்கியுண்ணும் பொல்லா) நாயினுங் கடைப்பட்ட தாழ்மையையுடையனாகிய அடியேன் மேலும் மேலும் வீணாகக் கெட்டலையாமல் மலையினைக் கொள்ளும் மாறாக் குறிபோன்று, அடிகள் நீர் வெளிப்பட்டருளிக் காட்சி கொடுத்தருளுதல்வேண்டும்.

        "வேதாந்த . . . சித்தர்கணமே"

     (வி - ம்) அகிலம் - சிதைவில்லது; அழிவில்லது. கறங்கு - காற்றாடி. அறிவினுக்கு நிலைக்களமாக இருப்பது திருவருள் என்னும் மெய்ம்மை வருமாறுணர்க:

"உன்னறிவை நீயே யுணர்வையே யாமாகி
 லின்னெடுநாட் பாசத் திசையாயே - யுன்னறிவை
 நீங்கா அறிவாகி நீரும் இரதமும்போல்
 ஆங்காண் அரனா ரருள்."
- துகளறுபோதம் 39.
(7)
கன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு
    கண்டெனவும் அடியெடுத்துக்
  கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்
    கருத்திலெழு கின்றவெல்லாம்
என்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால்
    ஈட்டுதமி ழென்தமிழினுக்
  கின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட்
    டிருத்தலால் இத்தமிழையே