இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் | எனருசித் திடவலியவந் | தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர் | இடையறா துருகிநாடி | உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும் | ஓய்ந்துயர்ந் தவசமாகி | உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே | உணர்வார்கள் உள்ளபடிகாண் | கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங் | கைக்கொள்வள் பக்குவத்தில் | கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக் | கருதிநகை யாவளதுபோல் | சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை | தோற்றிற் சுகாரம்பமாஞ் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |