பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

183
"பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை
 அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்து மெங்குஞ்
 செறிதருஞ் சிவன்ற னாலே அறிந்திடுஞ் சிவனைக் காணா
 அறிதருஞ் சிவனே எல்லாம் அறிந்தறி வித்தும் நிற்பன்."
- சிவஞானசித்தியார், 5.
(12)
 
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
    ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
  அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
    அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
    வாயாய்ப் பிதற்றுமவரார்
  மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
    வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
    பூதபே தங்களெவிடம்
  பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
    பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
    யாதுமுனை யன்றியுண்டோ
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "அவனன்றி . . . . . . ..பிதற்றுமவரார்" - அவனெனப் படும் விழுமிய முழுமுதல்வன் திருவருளின் திருக்குறிப்பல்லாமல், யாதாமொரு சிறு பொருளும், சிற்றுயிரும் எவ்வகை இயக்கமும் எய்துவது இல்லை என்னும் மேலானதாகிய (அப்பர் பெருமானார்) ஆருயிர் உறவினராகிய ஆப்தர் திருமொழியொன்று மாறாது உண்டு; (அம்முறையில் திருவருட்டுணையின்றித் தனித்தறியும்) அறிவாவது எது? அதுபோல் சில அறியாமையாவது எது? இவற்றை அறிந்தார்கள் யாவர்? பேச்சற்றதெனப்படும் மௌன நிலையோடிருக்கின்றவர்கள் யாவர்? அடியேன் போன்று, உடம்பின் ஓரிடத்தே அமையாமல் உடம்பு முழுவதும் வாயாக ஓவாது பிதற்றிக்கொண்டிருப்பவர் யாவர்?

     "மனதெனவு . . . . . . எவ்விடம்" - (ஓய்வின்றி மாய்வின்றி வீண் நினைவுகளையே மீட்டும் மீட்டும் எண்ணி எண்ணி மீளாத் துன்புறுத்தும்) மனதென்று சொல்லப்படும் ஒரு மாயை எங்கேயிருந்து வருகின்றது?