பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

240
கொம்புகளையுடைய வெள்ளையானை யென்னும் ஐராவதத்தின் மேலேறி உலாவரும் மேன்மையும், இந்நிலவுலகத்தில் (வேந்தராயிருந்து) செய்யும் ஆட்சியும், உலகமாயையாகிய மயக்குட்பட்ட உன் மத்த வெறியினர், விரும்புகின்ற பெருமயக்க மென்று தள்ளிவிடவும், அடியேங்களாலும் ஒரு சுட்டுதல் அற்று அகலவும்;

     "வைகின்ற . . . காண்" - (பேச்சற்ற நிலையில்) அடியேங்களை வைத்தருள்கின்ற பெருமையாளன்; சொல்லாமற் சொல்லியருளும் சிவகுரவன், என்றெழுந்தருளிவந்த நின்திருவருள் வாழி;

     "சுத்தபரி . . . பூமியே" - தூய்மையும் பெருநிறைவும் (வியாபகம்) எல்லையில்லாமையும் உடைய ஒருபொருளே! மறைமுடிபான மெய்ப் பொருளே! சொல்லுதற்கு அருமையான ஆருயிர்களினிடத்து அவ்வவ்விடங்களிலே நீக்கமற நிறைந்து நின்று திருவருள் மழையை ஊற்றெனச் சுரந்து பொழிந்தருளுகின்ற தண்ணளி மழையே, வீட்டு நிலையும், பேற்று நிலையும் ஒருங்கு விளைவித்தருள்கின்ற திருவருள் நன் நிலமே!

         "தேடரிய . . . ஆனந்தமே." -

     (வி - ம்.) புத்தமிர்தம் - புதிய அமிழ்தம். போகம் - நுகர்வு. பொலிவு - அழகு. வரிசை - மேன்மை. ஆதிக்கம் - ஆட்சி. மத்தம் - உன்மத்தம்; பெருமயக்கம். மால் - மயக்கம். சுட்டு - தனக்குவேறாகப் பொருள்களை வரைசெய்துணரும் உயிர் உணர்வு. சுருதி - மறை.
     சுட்டுணர்வுத்தன்மையினை வருமாறுணர்க :

சுட்டி யுணர்வதனைச் சுட்டி யசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண் - சுட்டி
உணர்ந்தநீ சத்தல்லை யுண்மையைத் தைவம்
புணர்ந்ததனாற் பொய்விட்டுப் போம்."
- சிவஞான போதம், 9
 
 
காக மோடுகழு கலகை நாய்நரிகள்
    சுற்று சோறிடு துருத்தியைக்
  காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
    காமவேள் நடன சாலையை
போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
    மலமி குந்தொழுகு கேணியை
  மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை
    முடங்க லார்கிடை சரக்கினை