ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை | உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால் | நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கிய னல்லேன் | நிவர்த்தியவை வேண்டுமிந்த நீல னுக்கே | என்றுமென்றும் இந்நெறியோர் குணமு மில்லை | இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ | கன்றுமனத் துடன் ஆடு தழைதின் றாற்போல் | கல்வியுங்கேள் வியுமாகிக் கலக்குற் றேனே. |