திருவருளாற்றலின் முன் அதன் திருக்குறிப்பால் அவை தொழிற்படுவதேயாம். இதற்கொப்புத் தீயினைச் சார்ந்த இரும்பு தீயின் செயலைச் செய்வதாகும் மேலும் நாழிகை வட்டிலாகிய கடிகாரம் பொழுது முதலியவற்றை வரையறுத்துக் காட்டும் வாய்மை அதனை அமைத்த அறிவுடையோன்றன் அறிவின் பண்பேயாம். அதுவும் இதற் கொப்பாகும். இனியாரோடு பயின்ற இடமும் அவ்வினியாரே போன்று காணப்படுமன்றோ! அதுபோலக் குரு வீற்றிருக்கும் மனமும் குருவினைப் போன்றே பெருமையெய்தும். இது பாற்கலமும் பால் போன்று பெருமை யெய்துவதோடொக்கும்.
(9)
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் | என்னை நாடிய என்னுயிர் நாதனே | உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி | தன்னை நாடுவன் தன்னந் தனியனே. |
(பொ - ள்) "பொன்னை . . . . . . . . தனியனே" - பொருளும், அப் பொருளால் வாழும் வாழ்க்கைக்குத் துணையாம் மாதரும், அம் மாதரொடு கூடிவாழும் வாழ்க்கைக்கு நிலைக்களமாகிய இவ்வுலகமும் நிலையான பொருள்கள் என்று சிறிதும் எண்ணிடேன், எளியேனைக் கருதியுள்ள என் இன்னுயிர்த்தலைவனாகிய உன்னையே இடையறாது உகந்து எண்ணுவன்; உன்னைவிட்டு நீங்காத உன் திருவருளாகிய தூயநிலையாயுள்ள பெருவெளி ஒளியினைப் பெரிதும் சிந்திப்பேன்.
(வி - ம்.) நாடுதல் - சிந்தித்தல், ஆருயிர்கட்குப் பேருயிராம் சிவபெருமான் ஒருவனே, என்றும் பொன்றா இனியன். அவ்வுண்மை வருமாறு:
| "என்னி லாரு மெனக்கினி யாரில்லை |
| என்னி லும்மினி யானொரு வன்னுளன் |
| என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் |
| கென்னு ளேநிற்கு மின்னம்பரீசனே," |
| - 5. 21 - 1. |
(1)
தன்ன தென்றுரை சாற்று வனவெலாம் | நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன் | இன்னம் என்னை யிடருறக் கூட்டினால் | பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. |
(பொ - ள்) உலகிடைக் காணப்பெறும் உடல் பொருள் ஆவி மூன்றனையும் (ஆசான் எழுந்தருளிவந்து அருளால் அறிவுறுத்துமுன்) ஒவ்வொருவரும் தன்னதென்றே சாற்றிக் கொண்டிருப்பர். அது