பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

366
நீறார் மேனி முக்கணுடை
    நிமலா அடியார் நினைவினிடை
ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை
    அரசே என்னை ஆள்வானே.
     (பொருள்) திருமேனியின்கண் முன்னும் முடிவும் முழுநீறணிந்து கொளல் மன்னுசிவ நன்னெறியின் வாழ்வெனச் சொல்லப்படும் திருவெண்ணீற்றினை அணிந்துகொண்ட மூன்று திருக்கண்களையுடைய இயல்பாகவே பாசங்களினின்று விலகிய வள்ளலே! மெய்யடியார் தம் தூயநினைவின்கண் பேராறாகப் பெருகும் பெருங்கருணையுடைய பெருவேந்தே! அடியேனைத் திருவருளால் சிவமாக்கி ஆட்கொண்டருள் பவனே! சொல்லப்படுகின்ற துன்பமும் கவலையும் நிறைந்த குடும்பமென்னும் கூத்தரங்கினுள் அழுந்தித் தடுமாற்ற மெய்தி அல்லலுறும் பாவியாகிய எளியேனை நின் திருவாய் மலர்ந்து வருகவென்று அழைத்தருளுதல் ஆகாதோ?

     (வி - ம்.) குடும்பக் கூத்தென்பது குடும்பத்தின்கண் "ஈன்றாளுமாய் எனக்கெந்தயுமாய் உடன் தோன்றினராய்" எனவும் "அப்பனீ அம்மை நீ ஐயனு நீ அன்புடைய மாமனுமாமியுநீ, ஒப்புடைய மாதருமொண்பொருளுநீ யொருகுலமுஞ் சுற்றமு நீ" எனவும் வருந் திருமா முறையின்படி சிறந்த குடும்பம் சிவபெருமானின் திருவருட்டிருக் கூத்தைந்தினையும் உலகோர்க்குணர்த்தும் கூத்தரங்கமாகும். அரங்கத்தில் நடிப்போர் பல்வேறு உறுப்பினராய்த் தோன்றுவர். அவரவர்க்குரிய படைத்துமொழிப் பெயரும் கோலமும் பூண்டு நடிப்பர். கூத்து முடிந்ததும் அவரவர் இயற் பெயருடன் விளங்குவர்.

    அதுபோல் ஆருயிர்க்கிழவரும் குடும்பத்தில் பல முறைப்பெயர்களுடன் தோன்றிவாழ்வர், அவ் வாழ்க்கை அவர்க்கும், பிறர்க்கும், அனைத்துயிர்கட்கும் இன்பம் பயக்கும் எழிலுடையதாய் இறைபணியாய்த் திகழ்தல் வேண்டு மென்பது சிவபெருமானின் திருவுள்ளத்திருவாணை. எனவே, குடும்ப வாழ்க்கையினை வடுநீங்குசிறப்பினதாய் நிகழ்த்திவரின் அதுவே சிவபெருமானின் திருவடி நீழலிற் சேர்ப்பிக்கும் நற்றவமாகும். அந் நடிப்புப் பணியினை மற்றுமொரு பிறப்பினிலும் வேண்டுமென அவாவுவது அறமுறையாகாது. படித்துத் தேறிய ஒருவன் மீட்டும் பள்ளியிற் புகுந்து தேறிய படிப்பையே படிக்க வேண்டுமென எண்ணுவது எங்ஙனம் பொருந்தாதோ? அது போல் பிறந்தவர் மீண்டும் பிறக்கவேண்டு மென எண்ணுவதும் பொருந்தாதாகும்.

(7)
வானே முதலாம் பெரும்பூதம்
    வகுத்துப் புரந்து மாற்றவல்ல
கோனே என்னைப் புரக்குநெறி
    குறித்தா யிலையே கொடியேனைத்