நின்துணையின்றி இயங்கும் இயல்புடையன அல்ல வென்று கண்டு நின் திருவடியினையே பற்றி உய்கின்றார். பாவியாகிய அடியேன் நிலையிலா உலகியற் பொருள்களைப் பொய்யெனத் தள்ளிவிட எது மெய்யெனக் கொண்டு, கைமுதல் அற்றுப் போமாறு மெய்வருந்தித் தொழில் செய்யும் உய்தியறியான் போன்று நிலையான மெய்ப்பொருள் முதலாம் உன்னை மறந்து உழல்கின்றவனானேன்.
(28)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தை | அகோவெனவும் வார ணாதி | அண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் | நிறுத்துமவ தானம் போல | எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன் | அருள்வெளியில் இலக வைத்துக் | கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும் | நிச்சயிக்கக் கூடா ஒன்றை. |
(பொ - ள்.) நிலவுலகின்மீது கண்கட்டு வித்தை செய்வானொருவன் பலரும் வியக்குமாறு வானவெளியில் கோழிமுட்டைகள் பலவற்றையும் அடுக்கடுக்காக நிறுத்தினாற்போன்று, கடல்மண்ணினும் மிகுதியாகக் காணப்படும் அளவிறந்த அண்டகோடிகளனைத்தையும் நின்திருவருள் வெளியிலே திகழும்படியாக அமைத்தருளிக்கொண்டு நிற்கும் நின் வியத்தகு திறலினை, எவரானும் உறுதிசெய்யக்கூடாத தொன்றை' அளவிலா அண்டத்துண்மை வருமாறு :
| "பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் |
| எறிகடல் ஏழின் மணலள வாகப் |
| பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் |
| செறியுமண் டாசனத் தேவர் பிரானே." |
| - 10. 2258 |
(1)
ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங் | கடந்தேழாம் யோக பூமி | நின்றுதெளிந் தவர்பேசா மௌனநியா | யத்தைநிறை நிறைவைத் தன்னை | அன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும் | தான்முதலாய் அசல மாகி | என்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்ற | சாந்தபத இயற்கை தன்னை. |