பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

423
அந்தோ! வேண்டுமிடத்து வேண்டியாங்குப் பெய்யும் வியத்தகு மழையினையும் பொன்மரம் எனப்படும் கற்பகப் பூங்காவினையும் உனக்கு உவமை காட்ட முடியுமோ? என்றால் முடியாதென்க. நிலமுதலாகச் சொல்லப்படும் ஏழு உலகங்களிலும் உன்னுடைய பெருமையினை உரைத்து முற்றுறச் செய்ய முடியுமோ? (முடியாதென்க.)

(11)
 
கட்டளைக்கலித்துறை
பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகில
மாயைப் பெரும்படைக் கேஇலக் காவெனை வைத்தனையோ
நீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணை
தாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே.
    (பொ - ள்.) தப்பாது பாய்ந்து கொல்லும் அத் தன்மை வாய்ந்த கொடிய புலியின்முன், மானானது தன் கன்றினைக் காட்டிவிட்டது போன்று, அழிவில்லாத உலக மாயையாகிய பெரும்படையுடன் பொரும்படி எளியேனைக் குறியாக வைத்தருளினையே, நீ எங்ஙனம் வகுத்தளித்தாலும் நன்மையேயாகும்; நின்னுடைய பெறற்கரும் பேரருள் நின்மெய்யடியார்மாட்டுப் பால்நினைந்தூட்டம் தாயினும் சாலப் பரிந்து தண்ணளி சுரக்குமா புரியும் உண்மை அறிவின்பத் தனி முதலே! பாயப்புலி - பாய் + அப்புலி.

(1)
தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்து
நிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்
கற்பரந் தாங்குக் கரைந்திட வானோத்த காட்சிநல்கும்
பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே.
    (பொ - ள்.) திருவருட்சிறப்பால் தான்தோன்றியாகிய தற்பரமும் மூதறிவாகிய சிற்பரமும் ஆகித் தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய பொன்னம்பலத்தின்கண்ணே; ஐந்தெழுத்தால் ஐந்தொழில் அருட்டிருக்கூத்தினை அம்மை காண நடித்தருள்வர்; அம்மட்டுமன்று, அம் போருகமாகிய செந்தாமரையிலுறையும் நான்முகனும்; திருமாலாகிய காப்போனும் படர்ந்து பரவிப்பணிந்து தொழும் தன்மை வாய்ந்த முறைமையினையுடையர்; எளியேனுடைய நெஞ்சமாகிய கருங்கல்லானது உருகிப் பரந்தது போன்று கரைந்திடவும், மிக்க மேன்மை வாய்ந்த திருவருள் வீழ்ச்சியினை நல்கியருளினர்; அழகு நிறைந்த அரமாகி அடியேனுடைய இருவினை எனப்படும் கருந்தாதாகிய இரும்பினைப் பொடி செய்தழித்தனர். நிற்பரம் போருகன் : நிற்பர் அம்போருகன். பொற்பரமாய் : பொற்பு + அரம் + ஆய்.

(2)
செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே