பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

488

மேற்குவித்துத் தொழவும், உடல் முற்றுங் குழைந்து பேரின்பமாகவும், இம்மைக்கண் நாளும் நற்றவம் புரிகின்றார். ஏழையேன் என் செய்வேன்? உலகெலாம் படைத்தருளும் பொருட்டுத் திருவருளின் திரு வயிறே 1 நிலைக்களமாகக் கொண்டருளியவனே!

(1)
திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்
கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோ
அடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்
படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே.
     (பொ - ள்.) உறுதி உண்டாக நின் திருவருளை அடியேன்பால் பதிவித்து எளியேனைக் காத்தாளுங் கடப்பாடு தேவரீருக்கென நாயேன் நாடி நின்திருவடியினையே கைகுவித்து இடையறாது தொழுது வருகின்றவன் யானல்லனோ? முறை கேடாக நிலைபேறில்லா இம் மாயை யென்னும் மாக்கடலிலே மூழ்கி இனியும் அல்லற்படும் தன்மை அடியேனுக்கு ஒருசிறிதும் முடியாது. என்னாருயிர்க்கு உறுதுணைப்புகலாம் பெரும்பற்றே! மேலாம் தனிப்பெரும் முதலே!

(1)
ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்
வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோ
பூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்
பாராதி வைத்த பதியே பராபரமே.
     (பொ - ள்.) அடியேனுடைய அறியாமையை நோக்கியருளித் திருவருட்குருவாக நீ யொருகால் எழுந்தருளி வாராயோ? வந்து அடியேனுடைய வருத்தமனைத்தும் தீர்த்தருளாயோ? வியப்பெனப்படும் பூராயமாக நின்திருவருள் நிறைவில் நிலவுலக முதலாய பல அண்டங்களையும் வைத்தருளிய முழுமுதல்வனே! மேலாம் தனிப் பெருமுதலே!

(2)
வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்
ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோ
ளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்
பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே.
     (பொ - ள்.) நிலையில்லா வாழ்வினுக்கு ஏதுவாக இன்னமும் மயக்க வாழ்வினில் வாழாது, நிலையுடைய நின் திருவடிவாழ்க்கைக்கு ஏதுவாக நன்னெறி நாற்படி நற்றவவாழ்க்கையில் வாழ நின்திருவடியை வந்தடைந்த நல்லார் அனைவரும், ஆழமான பெருங் கடலென்று புகழ்ந்து பேசும்படி திருவருள் நிறைவானார்கள். அடியேன்

 
 1. 
'சிவஞ்சத்தி'. சிவஞானசித்தியார், 2 - 4 - 5.