காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி | கன்மப் புனற்குளூறுங் | கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக் | காயத்துள் எனையிருத்திச் | சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத் | துருத்திக்குள் மதுஎன்னவே | துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள் | தோயநீ பாய்ச்சல்செய்து | நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை | நாட்டிப் புலப்பட்டியும் | நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று | நாடுசிவ போகமான | பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோ | பெரியஅகி லாண்டகோடி | பெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவு | பெரியநா யகியம்மையே. |